குவைத்தில் விவசாயம் உள்ளிட்ட 7 துறைகளில் உள்ளவர்கள் மீண்டும் தங்கள் இகாமாவை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி
Image : விசா Copy பதிவுக்காக மட்டுமே
குவைத்தில் இடையில் நிறுத்தப்பட்ட விசா மாற்றத்திற்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது
குவைத்தில் ஏழு துறைகளில் உள்ள தொழிலாளர்கள் இக்காமா(விசா) மீண்டும் தனியார் துறைக்கு மாற்ற அனுமதி வழங்கியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை குழுவின் செய்தித் தொடர்பாளர் அஸீல் அல் மசீத் தெரிவித்துள்ளார். அதன்படி தொழில்துறை(Industry), விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், ஜாமியா(கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்) மற்றும் சிறு வணிகம்(Free Trade Zone) ஆகிய துறைகளுக்கு விசா மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நாட்டில் நிலவியுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தொழிலாளியின் தற்போதைய ஸ்பான்சரின் அனுமதி தேவையாக இருக்கும் எனவும் தெரிகிறது.
இதற்கு முன்னர் இதே சலுகை கடந்த மார்ச் 3,2021 முதல் அனுமதிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 15,2021 முதல் தற்காலிகமாக வழங்கப்பட்ட இந்த சலுகையினை திரும்ப பெறுவதாக அறிவித்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் இந்த வசதியை பயன்படுத்தி விசா மாற்றம் பெற்றவர்களுக்கு இந்த புதிய முடிவு பொருந்தாது. மேலும் இந்த முடிவு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் என்றும் அஸீல் அல் மசீத் கூறியுள்ளார்.