BREAKING NEWS
latest

Saturday, September 25, 2021

குவைத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கடத்தப்பட்ட இந்தியரான மதுபான வியாபாரி உள்ளிட்ட அனைவரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குவைத்தில் மது விற்பனை தொடர்பான பிரச்சினையில் இந்தியர் கடத்தப்பட்டார்;இரகசிய பிரிவு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்

Image credit: Kuwait Police

குவைத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கடத்தப்பட்ட இந்தியரான மதுபான வியாபாரி உள்ளிட்ட அனைவரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குவைத்தில் கள்ளச்சாராய விற்பனைகள் சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அதை தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இரகசிய பிரிவு அதிகாரிகள் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மது விற்பனை கும்பல் மூலம் பிணைக்கைதியாக கடத்தப்பட்ட இந்தியரான மதுபான வியாபாரி ஒருவரை இரகசிய பிரிவு அதிகாரிகள் மீட்டனர். இந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம் நேற்று(24/09/21) காலை நடந்தது. கடத்தப்பட்ட இந்தியரின் மனைவியின் புகாரின் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய தேடுதலைத் தொடர்ந்து கபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து காவல்துறை அதிகாரிகள் இந்தியரை கண்டுபிடித்தனர்.

மேலும் கடத்தலுக்கு தலைமை தாங்கிய மூன்று பிதுனி இளைஞர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது, கடத்தப்பட்ட இந்தியர் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்களை குவைத்தில் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நபர் ஆவார். கடந்த மாதம், அவர் மது இறக்குமதி செய்யலாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடம் இருந்து 10,000 தினார்கள் முன்பணம் பெற்றார். ஆனால், அவரால் சரியான நேரத்தில் மதுபானம் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து 3 பேரும் பணத்தை திருப்பி கேட்டனர்,ஆனால் அவரால் பணத்தை திருப்பி தர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கடத்தி பிணைக்கைதியாக பிடித்து 10,000 தினார் திருப்பி தரும்படி கேட்டனர்.

இது குறித்து கடத்தப்பட்ட நபரின் மனைவி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கடந்த வியாழக்கிழமை மூன்று பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு வந்து அவரது கணவரை வெளியே அழைத்துச் சென்றனர் எனவும், பின்னர் கணவர் வீடு திரும்பவில்லை எனவும், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றும் புகார் அளித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மீட்கப்பட்டார். மூன்று குற்றவாளிகள் மற்றும் இந்தியர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரகசிய பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

Add your comments to குவைத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கடத்தப்பட்ட இந்தியரான மதுபான வியாபாரி உள்ளிட்ட அனைவரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

« PREV
NEXT »