BREAKING NEWS
latest

Wednesday, September 15, 2021

இந்திய தம்பதியினரின் பச்சிளம் குழந்தை குவைத்தில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது

குவைத்தில் இந்திய தம்பதிகளின் 10 நாட்களேயான பெண் குழந்தை மரணமடைந்தது

Image : குழந்தையின் இறுதிச்சடங்க நிகழ்வு

இந்திய தம்பதியினரின் பச்சிளம் குழந்தை குவைத்தில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது

குவைத்தில் இந்திய தம்பதியினரின் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இந்தியா, கேரளா மாநிலம், எர்ணாகுளம்,மூவாற்றுப்புழா பகுதியை சேர்ந்த டென்னி சேவியர் மற்றும் மின்சி என்ற தம்பதிகளின் 10 நாட்களேயான மகள் இசபெல் மரியம் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது. பிறவியிலேயே சில குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தது. இந்த தம்பதிகளுக்கு ஏற்கெனவே நோவா மற்றும் எரேமியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இசபெல் மூன்றாவதாக பிறந்தார். இதையடுத்து இன்று(15/09/21) புதன்கிழமை மாலையில் சுலைபியா கல்லறை தோட்டத்தில் பாதிரியார் ஜான்சன் தலைமையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

Add your comments to இந்திய தம்பதியினரின் பச்சிளம் குழந்தை குவைத்தில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது

« PREV
NEXT »