குவைத்தில் 60 வயது கடந்தவர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்ய விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட காரணங்களால் 42,000 ற்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
Image : Kuwait Airport
குவைத்தில் இருந்து கடந்த 6 மாதங்களில் 42,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர்
குவைத்திலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத வெளிநாட்டவர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்குவது தொடர்பான நிலுவையிலுள்ள குழப்பங்கள் இன்றும் தீர்க்கப்படவில்லை. முன்னதாக, இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரின் பரிசீலனைக்ககாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 60-வயதான வெளிநாட்டவர்களின் குடியிருப்பு அனுமதி புதுப்பிக்க வேண்டாம் என்ற முடிவுக்குப் பிறகு, குடியிருப்பு தகவலுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில்(கடந்த 6 மாதங்களில்) 42,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குவைத்தில் உள்ள தனியார் துறைகளை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளது. மருத்துவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த ஊழியர்களும் இதில் அடங்குவர், அவர்களில் சிலர் பிற நாடுகளுக்கு குடியேறியுள்ளனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக, உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு விசாவைப் புதுப்பிப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்க குவைத் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். உயர் கல்வி இல்லாததால் இவர்களில் பெரும்பாலான நபர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகின்ற நபர்கள் என்பதால், குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் இவர்களால் பெரும் தொகையினை கட்டணமாக செலுத்தி குடியிருப்பு அனுமதி புதுப்பிப்பது என்பது நடைமுறைக்கு மாறானது என்று எம்.பி.க்கள் உட்பட பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர். கடந்த ஜனவரி-1 முதல் வயது வரம்பு 60 நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு சட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.