குவைத்தில் புதிய விமான நிலைய பணியிடத்தில் மண்சரிவு 2 பேர் உயிரிழந்தனர்;ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது
Image : விபத்து நடந்த இடம்
குவைத்தில் புதிய விமான நிலைய பணியிடத்தில் மண்சரிவு 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த துயரமான நிகழ்வு நடந்துள்ளது
குவைத்தின் புதிய விமான நிலையத்தின் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்ற இடத்தில் இன்று(08/09/21) மாலையில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்று தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் என்ற முதல்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் மண்சரிவு சிக்கிய மூன்று தொழிலாளர்களில் 2 பேர் உயிரிழந்தனர் எனவும் இவர்கள் நேபாள நாட்டவர்கள் என்பதும், 3-வது நபர் இந்தியர் என்பதும் அவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளன.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராணா-அல்-ஃபரிசி மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை கடைசி வரையில் உடனிருந்து துரிதப்படுத்தினர். சுமார் 6 மீட்டர் ஆழமுள்ள குழியில் மண்சரிவு ஏற்பட்டது, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 4 மணிநேரம் இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து ஒருவாரத்தில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளன.