குவைத்தில் தடை செய்யப்பட்ட சைக்கோட்ரோபிக் மருந்துகளை மருந்து குறிப்பு இல்லாமல் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
Image : கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு வகையான 3,00,000 போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
குவைத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் குற்றவியல் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிந்துரை இல்லாமல் தடைசெய்யப்பட்ட மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை அரபு நாட்டை சேர்ந்த மருந்தாளர் (pharmacist)விற்பனை செய்வதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சைக்கோட்ரோபி என்ற மருந்து 100 பெட்டிகள் மருத்துவரின் குறிப்பு எதுவும் இல்லாமல் அவர் 4,000 தினார்களுக்கு விற்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அதேபோல் பல்வேறு வகையான 3,00,000 போதை மாத்திரைகளை இவர் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளி விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.