BREAKING NEWS
latest

Tuesday, September 28, 2021

அமைச்சர் அப்துல்லா அல்-சல்மான் அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை பொறுத்து விசா புதுப்பித்தல் செய்து வழங்கும் தொடர்பான முடிவுகள் அமையும்

குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கான பணி அனுமதியை புதுப்பித்தல் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

Image : குவைத் கடை வீதி

அமைச்சர் அப்துல்லா அல்-சல்மான் அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை பொறுத்து விசா புதுப்பித்தல் செய்து வழங்கும் தொடர்பான முடிவுகள் அமையும்

குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட உயர்நிலை பள்ளி கல்வி தகுதி இல்லாத வெளிநாட்டினர் பணி அனுமதி(Work Permit) புதுப்பித்தல் செய்து வழங்குவது தொடர்பாக நேற்று(28/09/21) மாலையில் நடந்த முக்கியமான கூட்டத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களின் விசாவைப் புதுப்பிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அப்துல்லா அல்-சல்மான் அவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக மேலும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் இரவு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி-1,2021 முதல் உயர்நிலை பள்ளி கல்வி தகுதி இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தங்கள் விசாக்களை புதுப்பிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த முடிவுக்கு பாராளுமன்ற MP-கள் உட்பட பலரும் கடும் கண்டனங்களை எழுப்பினர். இதற்குப் பிறகு 2000 தினார்கள் வருடாந்திர கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவர்களின் பணி அனுமதி(Work Permit) புதுப்பித்தல் செய்து வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் புதிய முடிவின்படி அமைச்சர் அப்துல்லா அல்-சல்மான் அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை பொறுத்து விசா புதுப்பித்தல் செய்து வழங்கும் தொடர்பான முடிவுகள் அமையும்,ஆனால் இதற்கு இன்று எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை.

Add your comments to அமைச்சர் அப்துல்லா அல்-சல்மான் அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை பொறுத்து விசா புதுப்பித்தல் செய்து வழங்கும் தொடர்பான முடிவுகள் அமையும்

« PREV
NEXT »