குவைத்தில் உள்ள மிகப்பெரிய கோவிட் சிகிச்சை மையமான மிஷிரிஃபில் கடந்த ஒரு வாரமாக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை
Image : மிஷிரிஃப் கள மருத்துவமனை
குவைத்தில் கோவிட் நோய்தொற்று சிறந்த முறையில் கட்டுக்குள் வந்துள்ள மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளன
குவைத்தில் உள்ள மிகப்பெரிய கோவிட் சிகிச்சை மையமான மிஷிரிஃபில் உள்ள கள மருத்துவமனையில்(Field Hospital) கடந்த ஐந்து நாட்களாக எந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வரவில்லை என்று இயக்குனர் முஹம்மது அல்-ஹுமைதான் தெரிவித்தார். இது நாட்டின் சுகாதார நிலைமைகள் நல்ல நிலைக்கு மேற்பட்டு வருவதற்கான அறிகுறியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையின் சிறப்பு கோவிட் வார்டான ஹால் நம்பர்-8 மூடப்படும் என்று அவர் விளங்கினார்.
நாட்டில் கொரோனா நோய்தொற்று பதிவான பிறகு இங்குள்ள வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றுவரை நாட்டில் உள்ள மொத்த கோவிட் பாதிப்புள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 662 ஆகும். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 10 ஆக குறைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் மிக குறைந்த அளவிலான நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ள வளைகுடா நாடுகளில் குவைத் முதலிடத்தில் உள்ளது.