குவைத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட புகழேந்திரன் அவர்கள் மரணமடைந்தார்
Image : மரணமடைந்த புகழேந்திரன் அவர்கள்
குவைத்தில் உள்ள இந்தியர்கள் உள்பட பலருக்கும் நன்கு அறியப்பட்ட புகழேந்திரன் அவர்களின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
குவைத்தில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இந்திய ஃப்ரண்ட்லைனர்ஸ் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த திரு.புகழேந்திரன் அவர்கள் நேற்று(செப்டம்பர்-24, 2021) சென்னையில் வைத்து மரணமடைந்தார். அவர் விடுமுறையில் சென்னைக்கு சென்றிருந்த நிலையில்,கடந்த வாரம் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். வரும் திங்கட்கிழமை அவரை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர், ஆனால் நேற்று(24/09/21) இரவு திடிரென உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் மருத்துவமனையில் வைத்து காலமானார்.
இதையடுத்து புகழேந்திரன் அவர்களின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு அங்கு வைத்து இன்று(25/09/21) சனிக்கிழமை மாலையில் நடைபெறும். மேலும் அவர் குவைத் தமிழ் சங்கத்தின் செயலாளர் மற்றும் தலைவராக பணியாற்றினார். அவர் 2 சாப்தங்களுக்கும் மேலாக KOC இல் பணியாற்றினார், பின்னர் ஓய்வுக்குப் பிறகு குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர், இருவரும் மருத்துவர்கள் என்பது குறி்ப்பிடத்தக்கது.