குவைத்தில் 18 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது
Image : Kuwait School
குவைத்தில் இன்று முதல் மீண்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்
குவைத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(26/09/21) ஞாயற்றுக்கிழமை காலை முதல் கொரோனா தொற்றுநோய் நாட்டில் கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. மழலையர் பள்ளி, ஆரம்ப மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான வகுப்புகள் குவைத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் இன்று முதல் தொடங்கியது. இன்று காலை ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு புது சீருடையில் வந்தனர். ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களை தோரணங்களால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாலைகள், கொடிகள், வண்ணமயமான பலூன்கள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவையுடன் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
குழந்தைகளுக்காக அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைக்குள் ஆர்வமுடன் மாணவர்கள் நுழைந்தனர். பள்ளி வாளாகங்கள் பதினெட்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் குழந்தைகளின் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது. குழந்தைகளின் வகுப்புகளுக்குள் நுழைவதற்கான அனுமதி கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மொத்த மாணவர்களில் பாதி பேர் நேரடியாகவும், பாதி பேர் ஆன்லைன் வழியாக சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளி பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில்,பாதி எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களை அழைத்து செல்ல முடியும். மேலும் பார்வையாளர்களுக்கான(பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள்) தடுப்பூசி சான்றிதழ் பரிசோதனை மற்றும் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை ஆகியவை இந்த புத்தாண்டில் பெரும்பாலான பள்ளிகளின் காணப்பட்ட புதிய சிறப்பம்சம் ஆகும். மேலும் வருகின்ற அக்டோபர்- 3 ஆம் தேதி மற்ற வகுப்புகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.