சவுதியில் விசிட் விசா காலாவதியாகும் முன்னர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
சவுதியில் விசிட் விசா காலாவதி கோவிட் மூலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறைக்கு முற்றுபுள்ளி, காலாவதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை
சவுதி அரேபியாவுக்கு விசிட் விசாவில் வருபவர்கள் காலாவதி தேதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குனரகம் இன்று(14/09/21) தெரிவித்துள்ளது. குடும்ப விசிட் விசாவில் இருந்தவர்களின் விசா முன்பு ஒரு வருடம் வரையில் புதுப்பிக்கப்பட்டன. அவர்களில் பலர் கடந்த நாட்களில் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முயன்ற நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளன.
கோவிட் மூலம் பயணம் தடைபட்ட பிறகு விசிட் விசா ஒரு வருடத்திற்கும் மேலாக புதுப்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் வரையில் இப்படி புதுப்பித்தல் செய்து பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கான விசாவில் வந்தவர்கள். மேலும் கொரோனா காரணமாக காலாவதியான அவர்களின் விசாக்கள் மூன்று மாதங்களுக்கு இந்த காலகட்டத்தில் பல முறை புதுப்பிக்கப்பட்டன. இதற்கு 100 ரியால் கட்டணம் மற்றும் காப்பீடு தொகை மட்டுமே செலவானது. இது பல சவுதியில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது. இந்நிலையில் இந்த சலுகை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் விசா எடுக்கும் நபர்கள் அதனுடைய காலாவதி முடியும் வரை மட்டுமே சவுதியில் தங்கியிருக்க முடியும்.