அமீரகத்தில் இருந்து சவுதியில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை இன்று 11 மணிமுதல் நீங்குகிறது
Image : Saudi Airport
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 3 நாடுகள் மீதான தற்காலி பயணத்தடையை இன்று முதல் நீக்குவதாக சவுதி உள்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது
சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய செய்தியில் அமீரகம் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று(08/09/21) புதன்கிழமை முதல் விலக்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு விசிட் விசாக்கள் வழங்கப்படுகின்ற நிலையில் இந்தியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அங்கு முடித்துவிட்டு பிறகு சவுதி அரேபியாவுக்கு எளிதாக பயணம் செய்ய முடியும். மற்ற நாடுகளை விட அமீரகம் வழியாக சவுதிக்கு பயணம் செய்ய செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. சவுதி தற்போதைய நிலையில் தங்கள் நாட்டில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியா சென்ற நபர்களை மட்டுமே நேரடியாக நுழைய அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்கள் நேரடியாக நுழைய இதுவரை அனுமதி வழங்கவில்லை.
எனவே இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து,பிறகு சவுதியில் நுழைய வேண்டியநிலை உள்ளதால், அமீரகம் மீதான தடை நீக்குவது இந்தியர்கள் சவுதியில் நுழைய பெரும் உதவியாக இருக்கும். மேலும் அந்த அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கியுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் சவுதி குடிமக்கள் இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே தடை நீக்கப்பட்டுள்ள நாட்டினர் இன்று(08/09/21) புதன்கிழமை காலை 11:00 மணி முதல் நாட்டின் நிலம்,துறைமுக(கடல்) எல்லைகள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக நாட்டில் நுழைய முடியும்.