இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை அக்டோபர்-31 வரையில் மீண்டும் நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளன
Image : DGCA India
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது;வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகளுக்கு பிரச்சனை இருக்காது
இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைந்த நிலையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(டிஜிசிஏ) சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக தற்காலிகமாக தடையினை அறிவித்தது. இந்த தடை கடந்த வருடம் பாதியில் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவிட் பரவல் கட்டுக்குள் வாராத நிலையில் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக இந்த செப்டம்பர்-30,2021 வரையில் தடை நிலுவையில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று(28/08/21) செவ்வாய்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சர்வதேச விமானங்களுக்கான தடை உள்ளூர் நேரப்படி (இந்திய நேரப்படி) அக்டோபர்-31,2021 நள்ளிரவு 23:59 வரையில் மீண்டும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போதும் பல நாடுகளில் பரவி வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அந்த அறிக்கையில் டிஜிசிஏ-யின் சிறப்பு அனுமதி அடிப்படையிலான விமான சேவைகள் மற்றும் Air-Bubble ஒப்பந்தம் அடிப்படையில் மலேசியா, சிங்கப்பூர் மாற்றும் வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையேயான வழித்தடங்களில் கடந்த பல மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்ற விமான சேவைகள் தொடர்ந்து எந்த தடையும் இன்றி இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக இயக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சரக்குகளை எடுத்து செல்கின்ற Cargo விமானங்களின் சேவைகளும் எந்த தடையும்யின்றி இயக்கப்படும் எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து நாடுகளின் பயணிகளும் இந்தியா வந்து செல்லும் விதமான இந்திய விமான நிலையங்கள் சாதாரண நிலைக்கு திருப்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்பது தெளிவாகியுள்ளன.