குவைத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அக்டோபர் முதல் வழங்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : Kuwait MOH Hospital
பூஸ்டர் டோஸ் எடுக்க புதியதாக தனித்தனியாக யாரும் பதிவு செய்ய வேண்டியதில்லை
குவைத்தில் Fizer கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்(மூன்றாவது டோஸ்) தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும்,இதற்கான நடவடிக்கைகளை சுகாதரத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முதல்கட்டமாக வயதானவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சத்தி குறைவாக உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது டோஸுக்கு தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மூன்றாவது டோஸ் வழங்கப்படும்.
மேலும் முதல்கட்டமாக தகுதியானவர்களுக்கு தடுப்பூசி எடுக்க செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தியாக நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்காக முன்னர் பதிவு செய்துள்ள கைபேசி எண்ணுக்கே அனுப்பப்படும். இதற்காக யாரும் புதியதாக தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இரண்டாவது டோஸ் எடுத்து ஆறு மாதங்கள் கடந்தவர்களில் முதல் கட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்படும்.