குவைத்தில் குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் நிபந்தனைகளுடன் குடிவரவுத்துறை வழங்க துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
Image : புகைப்படம் செய்தி பதிவுக்கான மட்டுமே
குவைத்தில் குடும்ப(Article-22) மற்றும் விசிட்(Article-14) விசாக்கள் நிபந்தனைகளுடன் குடிவரவுத்துறை வழங்க துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
குவைத்திலுள்ள சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை தாயகத்தில் இருந்து இப்போது விசிட் விசாவில் அழைத்து வரலாம். விசாக்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேபோல் மருத்துவ ஊழியர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விசிட் விசாக்களை குடும்ப விசாவாக மாற்றவும் முடியும். நாட்டின் சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை , National Guards மற்றும் தேசிய பெட்ரோலியம் துறை உள்ளிட்ட இடங்களில் வேலை செய்கின்ற மருத்துவ ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான Family Enter விசா வழங்கப்படும்.
மேலும் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்கின்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்ப விசா. நாட்டில் நுழைய பிறகு குடியிருப்பு(Residency) பெற முயற்சி செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரம் வழங்கினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கணவருக்கா Tourist Visit விசா வழங்கப்படும். மருத்துவத் துறையில் உள்ள மற்ற பெண் ஊழியர்களின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கான Tourist Visit விசா, தனியார் கல்வித் துறையில் பணிபுரியும் ஆண்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் விசா, அதுவே பெண் ஆசிரியர்கள் என்றால் கணவருக்கான Tourist Visit விசா வழங்கப்படும், ஆனால் நாட்டில் நுழைய பிறகு குடியிருப்பு(Residency) பெற முயற்சி செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்.
அதேபோல் பள்ளி கல்வி இயக்குநர், உதவி இயக்குனர், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரலாம். மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழில் விசாவில் பணிபுரிந்து, இகாமா பெறாதவர்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர நிறுவனத்தின் பெயரில் Commercial Visitor Visa வழங்கப்படும். ஆனால் இவர்கள் குடும்ப விசாவுக்கு மாற்றுவதற்கு முன்னர் Police Clearance Certificate வழங்கப்படும் என்று உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை புதிய அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில இரண்டு நாட்களாக இந்த வகையான விசாக்கள் சிறிய அளவில் வழங்க துவங்கியுள்ளது என்பதை தினசரி குவைத் பத்திரிக்கை உறுதிபடுத்தியுள்ளது.