துபாய்-அபுதாபி பேருந்து சேவை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
Image Credit: RTA
துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பேருந்து சேவைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரு அமீரக பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது
கோவிட் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்ட துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. அதாவது E101 பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. துபாயின் IBN Battuta பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி அபுதாபி Center பேருந்து நிலையத்தில் இந்த சேவை முடிவடையும். இந்த சேவைகளை ஆர்.டி.ஏ மற்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை மையத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது. பயணிகள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி தூரம் உள்ளிட்ட கோவிட் தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று RTA அறிவுறுத்தியுள்ளது.
அபுதாபிக்குள் நுழைய தடுப்பூசி போடப்பட்ட பயணிகளின் கைபேசியில் உள்ள AlHosn செயலியில் பச்சை சமிக்ஞையைப்(Green Signal) காட்ட வேண்டும். அல்லது 'E' கடிதம் அதுவும் இல்லை என்றால் Star அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல் தடுப்பூசி எடுக்காத நபர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் எதிர்மறை(Negative) சான்றிதழ் பயணத்தின் போது உடன் எடுத்துவர வேண்டும். இந்த சான்றிதழ் AlHosn செயலியிலும் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு முறை DPI பரிசோதனை முடிவுகள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.