கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சுருக்கமான நாடுகளில் குவைத்தும் ஒன்று என்று சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
Image : சுகாதாரத்துறை அமைச்சர்
கோவிட் பரவலின் தாக்கத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பும் அதிர்ஷ்டம் பெற்ற சுருக்கமான சில நாடுகளில் குவைத்தும் ஒன்று என்று அமைச்சர் தகவல்
சுகாதரத்துறை அமைச்சர் பசில் அல்-சபா கூறுகையில், கோவிட் பரவலின் தாக்கத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பும் அதிர்ஷ்டம் பெற்ற சுருக்கமான சில நாடுகளில் குவைத்தும் ஒன்று எனவும், நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் இயல்பு நிலைக்கு திரும்பும் விதமாக முன்னோக்கி செல்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து சேவைகளும் மீண்டும் திறக்கப்பட்டு இயக்கத்திற்கு வந்துள்ளது என்றார். அதுபோல் சில செயல்பாடுகளுக்கு இன்னும் சில கட்டுப்பாடுகள் நிலுவையில் உள்ளன எனவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தற்போது மிகக் குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே நடைமுறையில் உள்ளது எனவும், உலகம் முழுவதும் இதிலிருந்து மீண்டால் மட்டுமே நாமும் முழுமையாக இதிலிருந்து விடுபட முடியும் எனவும், அடுத்த வசந்த காலத்திற்குள் நாட்டின் ஆரோக்கிய நிலைமை தற்போதைய நிலையைவிட முழுமையாக மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதுபோல் நாட்டிலுள்ள 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அதை இறக்குமதி செய்து பெற்றுக்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம், அதை குழந்தைகளுக்கு வழங்க முழுமையாக தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.