குவைத் பணியிடத்தில் பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்துதல் போன்றவற்றிற்கு முற்றிலுமாக தடை விதித்து அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Image : அமைச்சர் அப்துல்லா அல் சல்மான்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிறுவனங்களின் ஆவணங்களை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்ய உத்தரவில் வழிவகை செய்யப்பட்டுள்ளன
குவைத்தில் வேலை செய்யும் இடங்களில் பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை முற்றிலுமாக தடுக்கும் விதமாக வணிக மற்றும் தொழில்துறையின் அமைச்சரும் மனிதவள மேம்பாட்டு துறையின் இயக்குனர் மற்றும் தலைவருமான அப்துல்லா அல் சல்மான் அவர்கள் உத்தரவை பிறப்பித்தார். உத்தரவில் நாட்டின் எண்ணெய்த் துறை மற்றும் தனியார் துறை உள்ளிட்ட பணி இடங்களில் தொழிலாளர் சட்ட விதிகளின்படி, தொழிலாளர்களிடம் பாலினம், வயது மற்றும் பதவி ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை இது தடை செய்கிறது.
கூடுதலாக, நவீன தொழில்நுட்பம் உட்பட்ட வழிகளை பயன்படுத்தி பணியிடங்களில் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் புதிய உத்தரவு மூலம் தடை செய்யபட்டுள்ளது. மேலும் இதுபோன்ற புகார்கள் எழுந்ததால் தீவிரமான விசாரனை நடத்தி அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலாளிகளின் நிறுவனங்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கி அரசு கொடுத்துள்ள ஆவணங்களை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்ய உத்தரவில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவு நாட்டின் வர்த்தகத் துறையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.