குவைத்தில் இணையதளத்தில் பதிவு செய்த 100 % பேருக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
Image : Kuwait MOH
மூன்றாவது டோஸ்யாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குவைத் சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் 100 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்படி பதிவு செய்து தடுப்பூசியின் முதல் டோஸ் கூட கிடைக்காத யாராவது இருந்தால் Comment செய்யவும்(Note: சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை தவிர்த்து). அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான செயல்முறைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்த அறிக்கையில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள், நீண்டகால நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். மூன்றாவது டோஸ்யாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் டெல்டா வகையை எதிர்த்துப் போராடுவதே இதன் குறிக்கோள் ஆகும். அதேநேரம் மாணவர்களுக்காக செலுத்தப்படும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையேயான இடைவெளி ஆறிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.