குவைத் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையில்;நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள பயண நடைமுறைகள் மாற்றமில்லாமல் தொடரும்
Image : சுகாதாரத்துறை அமைச்சர்
குவைத் இயல்பு நிலைமைக்கு திரும்பும் நிலையில் நாட்டில் நுழைய பயணிகளுக்காக விதிக்கப்பட்டுள்ள பயண நடைமுறைகள் மாற்றமில்லாமல் தொடரும்
- குவைத்தில் கோவிட் பரவலுக்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து குவைத்துக்குள் நுழைவதற்கான தற்போதைய நடைமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் பசில் அல்-சபா செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
- வெளிநாட்டிலிருந்து வருகின்ற நபர்கள் நாட்டில் நுழைபவர்களுக்கு குவைத் சுகாதரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ள தடுப்பூசிகளில் எதாவது ஒன்றின் இரண்டு டோஸ்களை பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றி ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
- 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட செல்லுபடியாகும் விதத்திலுள்ள PCR பரிசோதனை சான்றிதழ் எடுத்துவர வேண்டும் மற்றும் புறப்படுவதற்கு முன் முசாபர் செயலியில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- சிறப்பு அனுமதி அடிப்படையில் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகின்ற பயணிகள் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும் ஆகியவை தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகள் ஆகும் இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் கூறினார்.
- கோவிட் பரவலை தடுப்பதன் ஒரு பகுதியாக முன்னிலை போராளிகளாக பணியாற்றியவர்களில் விடமுயற்சியே நாட்டில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த முக்கியமான காரணமாக அமைந்தது எனவும், இதற்கு அரசாங்கத்தின் எல்லையில்லா ஆதரவும் உறுதுணையாக இருந்தது எனவும், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் சேவை செய்த சுகாதாரத்துறை ஊழியர்களை அமைச்சர் பாராட்டினார்.