குவைத்தில் இனிமுதல் இப்படி செய்தால் 10,000 தினார்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Image : குவைத் கடற்கரை பகுதி
குவைத்தில் தொடரும் சுற்றுச்சூழல் மீறல்கள் இனிமுதல் 10,000 தினார்கள் அபராதம் விதிக்கப்படும்
குவைத் அரசு அலட்சியமாக குப்பைகளை கடற்கரைகளில் கொட்டுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் 10,000 தினார்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இடத்தை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடற்கரைகளில் குப்பை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலர்(பொதுமக்கள்) அதைப் பயன்படுத்தத் தயாராக இல்லை.
மேலும் அதிகாரிகள் கடற்கரைகளில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதைப் புறக்கணித்து, மீறல்கள் தொடர்கிறது. சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் கடற்கரைகளில் சுற்றுச்சூழல் போலீஸை நியமித்துள்ளதாகவும், மீறுபவர்களுக்கு 10,000 தினார்கள் வரையில் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.