வெளிநாடுகளில் இருந்து அவசர தேவைகளுக்காக நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கும் இனிமுதல் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
வெளிநாடுகளில் இருந்து இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கும் இனிமுதல் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்ற இந்தியர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் மரணங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட அவசரகால தேவைகளுக்காக தாயகம் திரும்புகின்ற நேரத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்ள PCR பரிசோதனை தொடர்பான Negative சான்றிதழ் தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளன. எனவே இனிமுதல் எல்லா பயணிகளுக்கும் Air Suvidha தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் PCR பரிசோதனை தொடர்பான Negative சான்றிதழ் தேவைப்படும்.
அதுபோல் குவைத்,சவுதி,கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவசரகால தேவைக்காக தாயகம் திரும்புகின்ற நபர்களை இது பாதிக்கும். இந்த புதிய முடிவு மூலம் Exceptional என்ற Option-ஐ தேர்வு செய்து இனிமுதல் விபரங்கள் பதிவு செய்ய முடியாது.எனவே இனிமுதல் அவசரகால தேவைக்காக தாயகம் திரும்ப வேண்டும் என்றாலும் PCR பரிசோதனை செய்து அதனுடைய Result வரும் வரையில் குறைந்து 12 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அமீரகத்தில் துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்திலும் 3 மணிநேரத்தில் PCR பரிசோதனை செய்து Result கிடைக்கும் என்பதால் அங்கிருந்து வருகின்ற இந்தியர்களுக்கு பிரச்சனை இருக்காது.
அதேபோல் இன்றிலிருந்து 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை சான்றிதழ் Air Suvidha வில் பதிவேற்றம் செய்த பிறகுதான் பயணம் செய்ய அனுமதி பெற முடியும். எனவே இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் கூட எடுத்துக்கொண்ட வளைகுடா மக்களை பாதிக்கும் இந்த முடிவை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது வளைகுடா மக்களின் கோரிக்கை ஆகும். மேலும் இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இன்று(29/10/21) சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் அக்டோபர்-31,2021 வரையில் நீட்டிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர்-30,2021 நள்ளிரவு 23:59 வரையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் Air-Bubble ஒப்பந்தப்படி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்கள் பயணிகள் விமானங்கள் சேவை தொடர்ந்து இயக்கப்படும். அதுபோல் சரக்கு விமானங்களின் சேவைகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து இயக்கப்படும்.