குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் யாருடைய உதவியும் இன்றி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்;இடைத்தரகர்களுக்கு இங்கு வேலையில்லை
Image : இந்திய தூதர் அவர்கள்
குவைத்தில் இந்தியர்கள் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக நேரடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள தூதர் அறிவுறுத்தல்
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தூதரக சேவை மையங்களில் இடைத்தரகர்கள் முகவர்கள் யாருக்கும் வேலையில்லை பொதுமக்கள் நேரடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக 11 வாட்ஸ்-அப் எண்கள் நடைமுறையில் உள்ளன என்றும் இந்தியாவுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்தார். இந்திய தூதரகத்தில் நேற்று நடைபெற்ற Open House நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கான அரசின் திட்டங்கள்' என்ற தலைப்பில் இன்று ஓபன் ஹவுஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தூதரகத்தில் சேவைகள் பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரும் தேவை இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். கோவிட் பரவலை வெற்றிகரமாக கையாண்டதற்காக குவைத் அரசாங்கத்தை பாராட்டுகிறேன் என்றார்.
கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் இன்னும் பின்பற்றப்பட வேண்டும். இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு குவைத் இன்னும் அங்கீகாரம் வழங்காததும் மற்றும் அதிகமான விமானக் கட்டணம் காரணமாக பல இந்தியர்கள் இன்னும் தாயகத்தில் முடங்கிக் கிடக்கின்றனர். பொறியாளர்களின் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம்,செவிலியர்களை பணியமர்த்துதல் மற்றும் சான்றிதழில் உள்ள சிக்கல்கள் உட்பட பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்பட உள்ளன என்றார். இதற்கான தொடர் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தியாவில் இருந்து குவைத்திற்கான வீடடுத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு குவைத் ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் இன்று உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அலி அல்-சபாவை சந்தித்தேன் என்றார்.
அதுபோல் பல்வேறு காரணங்களால் குவைத் திரும்ப முடியாமல் தாயகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனைகள் குறித்தும் மற்றும் சிறையிலுள்ள இந்திய கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியதாக தூதுவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் வெளிநாட்டினருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் விரைவில் விளக்கப்படும். கேரளா மாநிலத்தின் திட்டங்கள் முதலில் விளக்கப்படும். தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து வரும் மாதங்களில் விவாதிக்கப்படும். இந்த Open House நிகழ்ச்சியில் கேரளா அரசு வெளிநாட்டினருக்காக செயல்படுத்தும் வாரியமான நோர்கோவின் தலைவர் டாக்டர்.கே.இளங்கோவன், தலைமை நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணன், நோர்கோ பொது மேலாளர் அஜித் கொளசேரி உள்ளிட்ட மேலும் பலர் நிகழ்வில் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டனர்.