சவுதியில் கூடுதல் சலுகைகள் அறிவிப்பு;ஞாயிற்றுக்கிழமை முதல் திறந்த வெளியில் முகக்கவசம் தேவையில்லை
Image : சவுதி அரேபியா
சவுதியில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் திறந்த வெளியில் முகக்கவசம் தேவையில்லை என்பது உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது
சவுதி அரேபியா கோவிட் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தியிருந்த விதிமுறைகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. புதிய விலக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(17/10/21) முதல் அமலுக்கு வருகிறது. ஏழு புதிய விலக்குகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் அது தொடர்பாக விரிவாக அறிவோம்.
- அனைவருக்கும் மக்கா மதீனாவிற்கு நுழைய அனுமதி. மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மதீனா மசூதி அல்-நபாவியின் முழுமையாக 100 சதவீதம் மக்கள் பயன்படுத்த முடியும். அனைத்து விசுவாசிகளுக்கும் நுழைய அனுமதி உண்டு. அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாகும். மக்கா மற்றும் மதீனா மசூதிகளுக்குள் நுழைய, முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக தவக்கல்னா செயலி கட்டாயமாகும்.
- பொது நிகழ்வு அரங்குகள் மற்றும் திருமண அரங்குகள் திறக்கலாம். இஸ்ட்ராஹாவ் மற்றும் திருமணங்கள் உட்பட்ட விழாக்களில் அனைவரும் கலந்து கொள்ளலாம். மக்கள் ஹோட்டல், அரங்குகளிலும் முழு இருக்கைகளிலும் அமரலாம். சமூக இடைவெளி தேவையில்லை. இருப்பினும், மூடப்பட்ட அரங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
- இனி சமூக இடைவெளி தேவையில்லை. பொது இடங்கள், உணவகங்கள், பொது போக்குவரத்து மற்றும் சினிமா அரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா இடங்களிலும் இரண்டு டோஸ் எடுத்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி.முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பராமரிப்பது தவக்கால்னா செயலி மூலம் சுகாதாரப் பரிசோதனை செய்யப்படாத பகுதிகளில் தொடரும். வாகனங்களிலும் சமூக இடைவெளி தேவையில்லை. அனைத்து இருக்கைகளிலும் அருகில் மக்கள் இருக்கலாம்.
- போது சேவை உள்ளிட்ட அலுவலகங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல சுகாதார அமைச்சகத்தின் தனிப்பட்ட தகவல்களுக்கு தவக்கல்னா செயலியை காண்பிப்பது கட்டாயமாகும். இது இல்லாமல் நுழைவது சட்டவிரோதமானது. தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களுக்கு மட்டுமே தற்போது நிலையில் ஈமூன் ஸ்டேட்டஸ் காட்டும்.
- நீங்கள் முகக்கவசம் பயன்படுத்த வேண்டிய இடங்களை மறந்துவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மூடப்பட்ட அரங்குகள் மற்றும் நிறுவனங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் செல்லும் நேரத்தில் முகக்கவசத்தை கட்டாயம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.உண்மையில் காற்றோட்டம் உள்ள திறந்த வெளியில் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை. அதிகாரிகள் பரிசோதனை செய்கின்ற நேரத்தில் காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில் நிற்கின்ற நபர்கள் மறந்து முகக்கவசம் அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது உண்மை.
- குறிப்பாக புதிய அறிவிப்பு மூலம் அனைத்து இடங்களிலும் விலக்கு உடல்நலக்குறைவு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிரூபிக்கும் ஆவணத்தை அவர்கள் சமர்ப்பித்து இருந்தால் அது தவக்காலிலும் காட்டும். இதன் மூலம் அவர்கள் எல்லா இடங்களிலும் நுழைய முடியும்.
- நேரடியான விமான சேவைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இது மிகவும் நம்பிக்கைக்குரிய செய்தி ஆகும். இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவிற்குள் நேரடியாக நுழைய அனுமதி பெற காத்திருக்கிறார்கள். கடந்த மாதம் இது தொடர்பாக விவாதிக்கப்பட்ட தகவலை இந்திய தூதரகம் ட்வீட் செய்ததை தவிர தூதரகத்திலிருந்து எந்த புதிய தகவலும் வெளியாகவில்லை. சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு நிகழ்சிகள் இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்குப் பிறகு விமானங்கள் அனுமதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய அறிவிப்பு மூலம் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்ற எவரும் இதன் பலனை அடைய முடியும் . பெரும்பாலான சவுதி மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸை எடுத்துக்கொண்ட நிலையில் சவுதி அரேபியாவில் புதிய அறிவிப்பு மூலம் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும்.