இந்தியா மற்றும் குவைத் வீட்டுத் தொழிலாளர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Image : பெண்மணி மாதிரி படம்
இந்தியாவில் இருந்து 30 முதல் 56 வயதிற்குட்பட்ட பெண் வீட்டுப் பணியாளர்களை மட்டுமே அழைத்துவர ஒப்பந்தம் செய்ய முடியும்
குவைத் மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையேயான வீட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வரைவுக்கு குவைத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வீட்டு தொழிலாளர்கள் நியமனத்திற்கு இரு நாடுகளின் அங்கீகாரமும் உறுதியாகிவிட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 30 முதல் 56 வயதிற்குட்பட்ட பெண் வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. அதுபோல் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 100 தினார்களாக இருக்க வேண்டும் மற்றும் அந்தந்த மாதத்தின் சம்பளம் தொழிலாளியின் பெயரில் துவங்கப்படுகின்ற வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே வழங்க வேண்டும் ஆகியவையும் முக்கியமானவைகள் ஆகும்.
மேலும் தொழிலாளியை அழைத்துவர செய்யப்படும் ஒப்பந்தத்திற்கு குவைத் இந்திய தூதரகம் மற்றும் அங்கீகாரம் பெற்ற ஆட்சேர்ப்பு ஏஜென்சியின் ஒப்புதலும் கண்டிப்பாக தேவை என்பது உள்ளிட்டவையும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான சில விதிமுறைகள் ஆகும். இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும் 30 வயதிற்குட்பட்ட இந்திய பெண் வீட்டு தொழிலாளர்களும் புதிதாக வேலைக்கான விசா எதுவும் வழங்கப்படவில்லை எனவும் ஆட்சேர்ப்பு அலுவலக கூட்டமைப்பின் தலைவர் காலித் அல் தக்னான் கூறினார். இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து புதிய வேலைக்காக அழைத்துவர செய்யப்படுகின்ற ஒப்பந்தங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.