BREAKING NEWS
latest

Monday, October 25, 2021

Fahaheel-யில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இந்தியருடையது என்று அடையாளம் காணப்பட்டது

குவைத்தில் நேற்று முன்தினம் இறந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டவர் இந்தியர் என்று அடையாளம் தெரிந்தது

Image : உயிரிழந்த முகம்மது அன்சார்(வயது-47)

Fahaheel-யில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இந்தியருடையது என்று அடையாளம் காணப்பட்டது

குவைத்தில் Fahaheel பகுதியில் பழுதடைந்த பயன்படுத்தாத கட்டிடம் ஒன்றில் இறந்து 20 நாட்களுக்கு மேலான நிலையில் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான செய்தி இரு தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் பதிவு செய்திருந்தோம். அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். இந்நிலையில் இறந்த நபர் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கடந்த மாதம் முதல் திடிரென காணாமல் போன நிலையி்ல் குவைத்தில் உள்ள உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம் தேடப்பட்டு வந்த இந்தியா,கேரளா மாநிலம் கோட்டயம், வேளூர் பகுதியை சேர்ந்த முகம்மது அன்சார்(வயது-47) என்பது தெரியவந்துள்ளது.

அவர் Fahaheel பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வேலை செய்து வந்தார். இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் காவல்துறை அதிகாரப்பூர்வமாக இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில் குவைத்தில் உள்ள உறவினர் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். இது தொடர்ந்து நடைபெற்று தடயவியல் பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் அன்சார் அவர்களுடையது என்பது உறுதியானது. சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும். உயிரிழந்த அன்சாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி அமீரகத்தில் செவிலியராக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to Fahaheel-யில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இந்தியருடையது என்று அடையாளம் காணப்பட்டது

« PREV
NEXT »