BREAKING NEWS
latest

Sunday, October 24, 2021

குவைத்தில் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டும் மாணவர்கள்;பெற்றோருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

குவைத்தில் 3 நாட்களில் 475 மாணவர்களை சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டிய வழக்கில் அதிகாரிகள் கைது செய்தனர்

Image : அதிகாரிகள் பரிசோதனை

குவைத்தில் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டும் மாணவர்கள்;பெற்றோருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

குவைத்தில் அக்டோபர்-20 முதல் 22 உள்ளிட்ட 3 நாட்களில் மட்டும் ஓட்டுனர் உரிமம் இல்லாத 475 மாணவர்களை வாகனங்களை ஓட்டிய வழக்கில் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 158 பேர் வீதம் சிக்கியுள்ளனர். இவர்களை சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இது தொடர்பாக குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிபட்ட விதிமீறல்களை யாராவது கண்டால் உடனடியாக 99324092 என்ற WhatsApp எண்ணில் புகார் செய்யலாம் மற்றும் அவசரகால உதவிக்கு 112 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

Add your comments to குவைத்தில் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டும் மாணவர்கள்;பெற்றோருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

« PREV
NEXT »