குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய விசாக்கள் வழங்குவது செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : மாதிரி விசா நகல் செய்தி பதிவுக்காக
குவைத்தில் புதிய விசாக்கள் வழங்குவது செவ்வாய்கிழமை முதல் துவக்கும் என்று தினசரி அரபு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
குவைத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட புதிய விசா வழங்கும் பணிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய பணி அனுமதி விசாக்கள் வழங்குவது குவைத் மனிதவள மேம்பாட்டு துறையின் சேவைகள் வழங்குவதற்கான நடைமுறையிலுள்ள ‘Ashal’ போர்டல் மூலம் வழங்கப்படும். இதன் காரணமாக புதிய விசா பெறுவதற்கு முதலாளிகள்(Sponsore) தேவையான ஆவணங்களை மின்னணு முறையில் ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
குவைத்திலுள்ள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதன் ஒரு பகுதியாக புதிய விசாக்கள் மற்றும் பணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை முன்னதாக தீர்மானித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக,புதிய பணி அனுமதிக்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றின் இரண்டு டோஸ்களை முடித்தவர்களுக்கு விசா வழங்கப்படும்.மேலும் மின்னணு முறையின் மூலம் Requirement செய்யப்படும் தொழிலாளர்கள் தடுப்பூசி சான்றிதழ்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களை ஒருங்கிணைக்க மனிதவள மேம்பாட்டு துறையிடம் குவைத் அமைச்சரவை அறிவுத்தல் செய்துள்ளது.