BREAKING NEWS
latest

Friday, October 1, 2021

குவைத்தில் பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அரிய வகையான இரத்தத்தை கொடையாக வழங்கினார் இந்திய பெண்மணி

குவைத்தில் நன்றி மறவாத இந்திய பெண்மணி;ஆபத்தான காலத்தில் தனக்கு கிடைத்த உதவியை பச்சிளம் குழந்தைக்கு திருப்பி செய்தார்

Image : கொடையாளர் வினுதா அவர்கள்

குவைத்தில் பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அரிய வகையான இரத்தத்தை கொடையாக வழங்கினார் இந்திய பெண்மணி

குவைத் மத்திய இரத்த வங்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உலகின் அரிதான இரத்த வகையான "பம்பாய்(Bombay)வகை இரத்தம்" தானம் செய்யும் இடமாக மாறியது. குவைத் சுகாதாரதுறையின் கீழ் உள்ள Ibn Sina மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சையில் உள்ள 4 மாதங்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையின் உயிரை காக்க அவசரகால அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு மட்டுமே காணப்படும் அரிய வகை இரத்தம் தேவைப்பட்டது. இதற்காக குவைத்தின் ஜாப்ரியா மத்திய ரத்த வங்கியில் வைத்து இதற்காக ரத்த தானம் நடைபெற்றது. நன்கொடையாளராக வந்தவர் மங்களூரைச் சேர்ந்த இந்திய பெண்மணியான வினுதா தீபு ஆவார்.

இந்தியரான வினுதா தீபு அவர்களை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்க வாய்பில்லை. அந்த நேரத்தில் நமது தளத்திலும் இவரை பற்றிய செய்தியை உதவி கேட்டு பதிவு செய்திருந்தோம். கடந்த 2017 ஆம் ஆண்டில், வினுதாவுக்கு திடிரென மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்த அரிய வகையான இரத்தம் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற நேரத்தில் BDK அமைப்பின் தீவிர முயற்சி மூலம், கத்தாரில் இருந்து இந்த அரிய வகையான இரத்தம் உள்ள இந்தியரான நிதீஷ் ரகுநாத் குவைத்திற்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் வினுதாவின் அறுவைச் சிகிச்சைக்கான இரத்தத்தை கொடையாக வழங்கினார். இதையடுத்து வினுதா அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் நன்றி மறவாத அவர் என்றாவது ஒருநாள் குவைத்தில் வைத்து யாருக்காவது தன்னுடைய வகையிலான இரத்தம் தேவைப்பட்டால் தயங்காமல் தானாக முன்வந்து வழங்குவேன் என்று முடிவு செய்திருந்தார்.

மேலும் அவசரகாலத்தில் இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இரத்தம் தானம் செய்த வினுதாவை இரத்த வங்கியின் அதிகாரிகள் கவுரவித்தனர். மேலும் இரத்த தானத்திற்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலான சிறப்பு சிகிச்சையின் மூலம் வினுதா பெற்றெடுத்தார். செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், நான்கு மாதங்கள் மட்டுமே ஆன குவைத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கே இந்த அரிய வகையான இரத்தம் தேவைப்பட்டது. இந்நிலையில் குவைத் இரத்த வங்கியின் அதிகாரிகள் BDK பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டனர். அதுபோல் வினுதா குவைத் ராயல் ஹயாட் மருத்துவமனையில் டெக்னீசியன் ஆவார். அவர் தனது வேலைக்கு இடையிலும் தனது கணவருடன் அதிகாலையில் இரத்த வங்கிக்கு வந்தார். இதன் மூலம் வினுதா மற்றொரு இரத்த உறவை பெற்ற மகிழ்ச்சியில் தான் வேலை செய்கின்ற மருத்துமனைக்கு கிளம்பி சென்றார்.

Add your comments to குவைத்தில் பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அரிய வகையான இரத்தத்தை கொடையாக வழங்கினார் இந்திய பெண்மணி

« PREV
NEXT »