குவைத்தில் இனிமுதல் 3 வருடங்களுக்கு குறைவாக சிறிய குற்றங்களுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்ட நபர்கள் தங்களுடைய வீட்டிலேயே அதை அனுபவிக்கலாம்
Image : கண்காணிப்பு கருவி
குவைத்தில் 3 வருடங்களுக்கும் குறைவான சிறிய குற்றங்களுக்கு தண்டனை பெற்ற நபர்கள் அதை தங்கள் சொந்த வீட்டில் அனுபவிக்கலாம்
குவைத்தில் இனிமுதல் கிரிமினல் பின்னணி இல்லாத சிறிய குற்றங்களுக்காக 3 வருடங்களுக்கும் குறைவான தண்டனைகள் விதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் வீடுகளிலேயே அதை அனுபவிக்க முடியும். இந்த புதிய முடிவு மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை தவறான வழிகளுக்கு திரும்பாமல் சரியான பாதைக்கு திரும்புவதற்கு வழிவகை செய்யும் என்ற முடிவின் அடிப்படையில் எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தண்டனை காலம் முடியும் வரையில் அந்த நபர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது. இதனை கண்காணிக்கும் விதமாக உடலில் இருத்து பிரிக்க முடியாதபடி Tracking Device காலில் பொருத்தப்படும். தொடர்ந்து உள்துறை அமைச்சக கட்டுபாட்டு அறையில் இதற்காக ஏற்பாடு செய்துள்ள தனிப்பிரிவு அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பார்கள். முதல்கட்டமாக தண்டனை காலத்தில் நன்னடத்தையை கடைபிடித்த சிறையிலுள்ள குவைத்திகள் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 17 பேரை சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த கருவி பொருத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
மேலும் சட்டத்தை மீறி வெளியே சென்றால் அந்த நபர் உடனடியாக மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். மேலும் சட்டத்தை மீறியதற்காக கூடுதல் தண்டனை விதிக்கப்படும். அதுபோல் அவசரகாலத்தில் இந்த நபர்கள் மருத்துமனைக்கு செல்ல உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற வேண்டும். அதுபோல் Tracking Device-ஐ சேதபடுத்தினாலோ அல்லது அதனுடைய Signal கட்டுபாட்டு அறைக்கு கிடைக்காதபடி செய்தாலோ அதற்கும் கூடுதலாக தண்டனை விதிக்கப்படும். மேலும் யாருக்கு வேண்டுமானலும் தண்டனை அனுபவிக்கும் நபரை அவருடைய வீட்டிற்கு சென்று சந்திக்க எந்த தடையும் இல்லை. இந்த புதிய திட்டத்தின் பலனை பெறுவதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரின் அனுமதியுடன் சிறை காவல்துறை தலைமை அதிகாரிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருகின்றன.