கத்தாரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் தங்கள் ஆவணங்களை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
Image credit: கத்தார் உள்துறை அமைச்சகம்
கத்தாரில் உள்ள இந்தியா,இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தங்கள் ஆவணங்களை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
கத்தாருக்கு வெளிநாட்டவர்களின் வருகை, திரும்ப செல்லுதல் மற்றும் குடியிருப்பு தொடர்பான 2015 ஆம் ஆண்டின் சட்டத்தில் உள்ள பிரிவு எண்-21 இன் விதிமுறைகளின்படி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின்(வெளிநாட்டவர்களின்) குடியிருப்பு அனுமதியை சரிசெய்து சட்டபூர்வமாக்க அக்டோபர்-10, 2021 முதல் டிசம்பர்-31,2021 வரை காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே கத்தார் வாழ் இந்தியா,இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அதன்படி காத்தார் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட காலாவதிக்குள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரவு எண்-21 யின் அடிப்படையில் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறவோ அல்லது அபராத தொகையினை குறைப்பு செய்யவோ அல்லது முதலாளி மற்றும் நிறுவனங்களுடன் சமரசம் செய்யவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த சலுகையினை பயன்படுத்த நினைக்கின்ற நபர்கள் Search and Followup Department அல்லது Umm Salal, Umm Sunaim(Formerly Industrial Area), Mesaimeer, AlI Wakra மற்றும் Al Rayyan ஆகிய இடங்களில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவை மைய அலுவலகங்களிலோ மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள நேரத்தில் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஆவணங்கள் சரிசெய்ய தகுதியான நபர்கள் பின்வருபவர்கள் ஆவார்கள்.(1)குடியிருப்பு விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள்,(2) வேலை விசா விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள்,(3) குடும்ப விசிட் விசா விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினர் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது. அதுபோல் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டவிரோதமாக தங்குவதைத் தவிர்த்து ஆவணங்களை சட்டபூர்வமாக்கி அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கவும் உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.