குவைத்தில் அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான நுழைவு விசாக்களும் வழங்குவது மீண்டும் துவங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : விசா விண்ணப்பத்தின் மாதிரி
குவைத்தில் மீண்டும் நுழைவு விசாக்கள் வழங்குவது தொடர்பாக நாளை திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்
குவைத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து துறைகளுக்குமான நுழைவு விசாக்களும்(Enter Visa) நவம்பர் முதல் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது நாட்டில் சுகாதார நிலைமை மேம்பட்டு, கொரோனா வைரஸ் மூலம் தினசரி பாதிக்கப்படுகின்ற நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் நாட்டில் இயங்கி வருகின்ற உணவு நிறுவனங்களுக்கு வேலை விசாக்கள்(Work Visa)மற்றும் Commercial விசிட் விசாக்கள் வழங்குவதற்காக நாட்டின் கொரோனா அவசரகால மறுஆய்வு குழு கடந்த 4-ஆம் தேதி அங்கீகராம் வழங்கியிருந்தது. மேலும் குவைத்திலுள்ள சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைகளில் வேலை செய்து வருகின்ற வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தாயகத்தில் இருந்து விசிட் விசாவில் அழைத்து வரவும் கடந்த செப்டம்பர் பாதியில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்ததும் குறிப்பிடதக்கது. இதைத் தொடர்ந்து நாட்டில் சுகாதார நிலைமை மேம்பட்டுள்ள நிலையில் அனைத்து துறைகளுக்குமான நுழைவு விசாக்கள் வழங்க அதிகாரிகள் மீண்டும் தயாராகி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.