குவைத்தில் இன்றும் மற்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் ஞாயிற்றுக்கிழமை வரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர் தெரிவித்துள்ளார்
Image credit: முஹம்மது கரம் அவர்கள்
குவைத்தில் இன்றும் மற்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது
குவைத்தில் இன்றும் மற்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் ஞாயிற்றுக்கிழமை வரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர் தெரிவித்துள்ளார். அரேபிய தீபகற்பத்தின் தெற்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் விளைவாக நாட்டின் சில பகுதிகளில் பரவலாக லேசான மழை "தூறல்" பெய்துள்ளதாக இன்று காலை செய்தி வந்ததுள்ளது.
மேகமூட்டம் முதல் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும், இன்று மற்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் முஹம்மது கரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நாட்டில் நிலவும் காற்றின் வேகம் தென்கிழக்கு பகுதியில் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும் மணிக்கு 15 முதல் 30 கிலோமீட்டர் வேகம் வரை ஏற்ப்படும் என்று கரம் விளக்கினார், நாடில் வார இறுதியில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 32 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.