BREAKING NEWS
latest

Thursday, October 7, 2021

குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசா புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று புதிய நம்பிக்கை பிறந்துள்ளது

குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு அனுமதி ரத்து என்ற முடிவு சட்டபூர்வமாக செல்லும்படி ஆகாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : Old age Works in Kuwait Airport

குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசா புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று புதிய நம்பிக்கை பிறந்துள்ளது

குவைத்தில் உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு அனுமதியை புதுப்பித்து வழங்க கூடாது என்ற முடிவு செல்லுப்படி ஆகாது என்று ஃபத்வா மற்றும் சட்டக் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த குழுவின் தலைவர் சலா அல்-சவுத், இந்த முடிவு சட்டபூர்வமாக செல்லும்படி ஆகாது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னர் உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60-வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு அனுமதி புதுப்பித்தல் செய்து வழங்குவது ரத்து செய்வதாக ஆகஸ்ட் 2020 இல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த முடிவு ஜனவரி-1,2021 முதல் அமலுக்கு வந்தது. அப்போதிருந்து, சட்டத்தைத் திருத்துவதற்கு பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கிடையில் இன்று இந்த முடிவு சட்டபூர்வமாக செல்லும்படி ஆகாது என்று ஃபத்வா சட்டக் குழு தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசா புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று புதிய நம்பிக்கை பிறந்துள்ளது

« PREV
NEXT »