குவைத்தின் Salmiya பகுதியில் நடந்த பரிசோதனையில் கள்ளச்சாராய விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்
Image : பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய குவியல்
குவைத்தில் கள்ளச்சாராய பிரியர்களுக்கு எச்சரிக்கை அதை சட்டவிரோதமாக வாங்கி குடிக்க ஆசைப்பட்டு வாழ்கையை தொலைக்க வேண்டாம்
குவைத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 120 கள்ளச்சாராய மது பாட்டில்களை விற்க தயார் நிலையில் எடுத்துவந்த 3 ஆசியா நாட்டவர்களின் முயற்சியை சால்மியா காவல்துறை அதிகாரிகள் முறியடித்தனர், இந்த கள்ளச்சாராயங்களை வார இறுதி நாளான நேற்று வெள்ளிகிழமை 3 வாகனங்களில் எடுத்து வந்தனர். இது குறித்த ரகசிய தகவல் அடிப்படையில் உள்துறை அமைச்சகபொது பாதுகாப்பு துணை செயலாளர் மேஜர் ஜெனரல் அப்துல்லா அல்-அலியின் அறிவுறுத்தலின் பேரில், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் 3 வாகனங்களை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய குவியல்களை போலிசார் கண்டு பிடித்தனர். தொடர்ந்து அதன் இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.மூன்று பேரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையே மூன்றாவது நபர் தப்பியோடினார் அவரும் வாகனத்தில் மதுவை பதுக்கி வைத்திருந்தார்.
மேலும் அவர்களை குறித்து அதிகாரிகள் கூடுதல் பரிசோதனை செய்தபோது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி என்பது தெரியவந்தது அவரை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட துறையிடமும், அதே நேரத்தில் இரண்டாவது நபரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகத்திற்கிடமான மறைவான இடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள இடங்களில் குறிப்பாக வார இறுதி நாட்களில் நிற்கும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்காணிப்பதன் மூலம் பல போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனையாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.