இந்தியாவில் அக்டோபர்-18 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Image : டெல்லி விமான நிலையம்
சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்தும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படும்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகின்றன நிலையில் வருகின்ற அக்டோபர்-18,2021 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க விமான நிறுவனங்களுக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தற்போது நடைமுறையிலுள்ள கோவிட் விதிமுறைகள் பின்பற்றி மட்டுமே இதை நடைமுறைப்படுத்தவும் அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக தற்போது நாட்டிலுள்ள 85 சதவீதம் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் நாட்டில் கோவிட் பரவல் காரணமாக முழுமையாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில். கொரோனா பரவல் முதல் அலைக்கு பிறகு கடந்த மே முதல் 33 சதவீதம் விமானங்கள் முதல்கட்டமாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக விமான சேவைகள் இயக்கும் விகிதம் உயர்த்தப்பட்டு தற்போது 85 சதவீதம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர்-18,2021 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க,விமான நிறுவனங்களுக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு பிறகு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் சர்வதேச விமானங்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது எப்போது நீக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே சர்வதேச விமான சேவைகள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே தொடர்ந்து இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. வரும் நாட்களில் இதில் எதாவது மாற்றம் ஏற்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில், குடும்ப வாழ்வாதாரத்துக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்கின்ற இந்தியர்கள் லட்சங்கள் செலவு செய்து தங்கள் பணியிடங்களுக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.