குவைத்தில் 20 போலியான வீட்டுவேலை அலுவலகங்கள் கண்டறிந்து 60 க்கும் மேற்ப்பட்ட நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர்
Image : கைது செய்யப்பட்ட நபர்களில் சிலர்
குவைத்தில் போலியான வீட்டுவேலை அலுவலகங்களை கண்டறியும் சோதனைகள் தொடர்கிறது பலர் கைது செய்யப்பட்டனர்
குவைத் உள்துறை அமைச்சகத்தின் பொது உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஊடகத்துறை குடியிருப்புச் சட்டத்தை மீறுபவர்களை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் போலி வீட்டுப் பணியாளர் அலுவலகங்களை நடத்திவந்த ஒரு ஆசியா நாட்டவரை கைது செய்தனர். குடியிருப்பு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அன்வர் அல்-பர்ஜாஸ் தலைமையில் இந்த பரிசோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஹவாலி கவர்னரேட்டில் இயங்கிவந்த போலி பணிப்பெண்களை வேலைக்காக அமர்த்தும் அலுவலகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் அந்த நபர் முதலாளிகளின் வீட்டை விட்டு தப்பியோடிய வீட்டுப் பணியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் தற்காலிக வேலைக்கு அமர்த்தி வந்தார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போலி அலுவலகங்களின் கீழ் பணிபுரிந்த மற்றும் முதலாளிகளின் வீடுகளில் இருந்து தப்பி ஓடிய பல வீட்டு வேலைக்காரர்களையும் இந்த இடத்தில் இருந்து அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அதிகாரிகள் கைது செய்தபோது ஒரு பெண்மணி கர்ப்பமாக இருந்தார். புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் மாதத்தில், அதிகாரிகள் 20 போலி வீட்டுப் பணியாளர் அலுவலகங்களை கண்டறிந்து 60 ற்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.