குவைத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு PCR பரிசோதனை தேவையில்லை என்ற முடிவு இந்தியருக்கு பயனளிக்காது
குவைத் சுகாதரத்துறையின் புதிய முடிவு தாயகம் செல்லும் இந்தியர்களுக்கு பொருந்தாது;இந்திய விமான நிலையங்களில் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை ஆகும்
குவைத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனிமுதல் PCR பரிசோதனை தேவையில்லை என்ற சுகாதார அமைச்சகத்தின் முடிவு இந்தியாவுக்கு பயணிப்பவர்களுக்கு பயனளிக்காது. தற்போதும் தமிழகம்,கேரளா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களின் சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். மேலும் இது தொடர்பான எதிர்மறை சான்றிதழை விமான நிலையத்தில் வருகின்ற பயணி காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.எனவே குவைத்தில் இருந்து வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு PCR பரிசோதனை தொடர்பான சான்றிதழ் தேவையில்லை என்ற குவைத் சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய முடிவு இந்தியாவுக்கு பயணிப்பவர்களுக்கு பயனளிக்காது.
இருப்பினும் இந்த முடிவை விரைவில் மற்ற ஜிசிசி நாடுகளும் செயல்படுத்தும் என்று தெரிகிறது. எனவே புதிய அறிவிப்பை வளைகுடா நாடுகள் வெளியிடும் பட்சத்தில் அந்நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டினரும் இதன் மூலம் பயனடைவார்கள். குவைத்தில் இருந்து வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை சான்றிதழை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசோதனை செய்யாது என்று நேற்று(25/10/21) மாலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.