குவைத்தில் போலியாக மருத்துவ சேவைகளை வழங்கிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
Image : கைது செய்யப்பட்டவர்கள்
குவைத்தில் சட்டவிரோதமாக போலியான கிளினிக் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்
குவைத்தின் போலி கிளினிக் மற்றும் வீட்டு மருத்துவ சேவையை வழங்கும் நிறுவனத்தை சட்டவிரோதமாக நடத்தி வந்த பெண் உள்ளிட்ட 3 ஆசியா நாட்டவர்களை ரெசிடென்சி இன்வெஸ்டிகேஷன்ஸ் டிம்பார்மென்ட் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்கள் கிளினிக் ஒன்றை நடத்தி வருவதாக விளம்பரங்களை சமூக ஊடகங்கள் வழியாகவும் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியும் சிகிச்சை பெறுவதற்காக நபர்களை கவர்ந்து வந்தனர். இந்த சட்டவிரோதமான செயலில் ஆசியா நாட்டவர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக குடியிருப்பு விவகாரங்களுக்கான விசாரணை பொது நிர்வாகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த நபரை சால்மியா பகுதியில் இருந்து அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் Sponsore யின் வீட்டைவிட்டு ஓடிவந்த இளம் வீட்டுப் பணிப்பெண் மற்றும் இவர்களுடன் சேர்ந்து இதை நடத்திவந்த டெலிவரி டிரைவர் உள்பட 3 பேரையுமே அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல போலியான ரசீதுகள் மற்றும் வவுச்சர்கள் கைப்பற்றப்பட்டன. இஸ்பிலியா பகுதியில் இந்த போலியான ஹோம் கேர் கிளினிக்கை இவர்கள் நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தண்டனைக்குப் பிறகு குற்றவாளிகளான இவர்கள் மீண்டும் குவைத்தில் நுழைய முடியாதபடி விரல்பதிவு வைத்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தனிப்பட்ட ஸ்பான்சர்ஷிப்பில் இல்லாவிட்டால், எந்தவொரு தொழிலாளர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்றும், அது சட்டவிரோதமானது எனவும் பாதுகாப்பு அதிகாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுத்தல் செய்துள்ளனர். மேலும் பின்வரும் எண்களை அழைப்பதன் மூலம் தொழில் சட்டம் தொடர்பான மீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை அளிக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர். தொடர்பு எண்கள் 97288200, 25582555, 97288211