குவைத்தின் விமான நிலையம் முழுமையாக இயக்க துவங்கியதும் பயணச்சீட்டு கட்டணம் 20,000 ற்கும் குறைவாக இருக்கும்
Image : Kuwait Airport
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவைத்திற்கு நேரடியாக வருவதற்கான பயணச்சீட்டு கட்டணங்கள் வரும் நாட்களில் குறைய துவங்கும்
குவைத் விமான நிலையம் முழு இயக்க திறனுடன் திறக்கப்பட்டவுடன் பல்வேறு நாடுகளிலிருந்து குவைத்திற்கு வருவதற்கான விமானக் கட்டணம் கணிசமாகக் குறைக்கப்படும். வருகின்ற அக்டோபர்-24,2021 முதல் குவைத் விமான நிலையம் அதன் முழுமையான திறனுடன் செயல்பட துவங்கும். இதைத் தொடர்ந்து, குவைத்துக்கு சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் புதிய விமான சேவைகளுக்கான அட்டவணைகளை தயார் செய்து வருகின்றனர்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, கோ-ஏர், குவைத் எயர்வேஸ் மற்றும் ஜசீரா ஆகிய விமான நிறுவனங்கள் நேரடி விமானங்களை இயக்குகின்றன.
மேலும் இதில் இந்தியா எக்ஸ்பிரஸ் தவிர, குவைத் வருகின்ற மற்ற நான்கு விமான நிறுவனங்களின் கட்டணம் தற்போது சராசரியாக ரூ.60,000 க்கு மேல் ஆகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் தற்போதைய அதிகபட்ச கட்டணம் ரூ.30,000 ஆகும். இருப்பினும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் டிக்கெட் எளிதில் கிடைக்காததால் பலரும் அதிக கட்டணத்தில் மற்ற விமான நிறுவனங்களை நம்பியுள்ளனர். ஆனால் குவைத் விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் பழைய நிலைக்குத் திரும்புவதால் இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்காக டிக்கெட்டு விலைகள் அதிகபட்சம் ரூ .20,000 க்கும் குறைவாகவே இருக்கும் என்று பயண சேவைகளை வழங்குகின்ற துறையில் வேலை செய்பவர்கள் கூறுகின்றனர்.