குவைத்தில் மீண்டும் இந்திய பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
குவைத்தில் தற்கொலை வழக்குகள் அதிகரிக்கிறது முதலிடத்தில் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது
குவைத்தின் Salmiya பகுதியில் உள்ள மிக உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட இந்திய பெண்ணின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சகத்தின் அவசரகால உதவி மையத்திற்கு சல்மியா பகுதியில் உயரமான கட்டத்தில் இருந்து விழுந்து ஒரு பெண் மரணமடைந்தது பற்றிய அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசர உதவி மருத்துவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் எனவும், அவர்கள் வந்து பார்த்தபோது ஒரு கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை கண்டதாகவும்,மேலும் அதை ஆய்வு செய்ய தடயவியல் பிரவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தனர். மேலும் துப்பறியும் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் 65-வயதான இந்தியப் பெண் எனவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள தனது அறையின் ஜன்னலில் இருந்து அந்த பெண்மணி குதித்தார் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு,கூடுதல் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிட்டுள்ளது.