குவைத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க முன்பதிவு தேவையில்லை என்று சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்
Image : சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர்
குவைத்தில் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க அறிவுத்தல்
குவைத்திலுள்ள அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர் டாக்டர்.அப்துல்லா அல் சனத் தெளிவுபடுத்தினார். மேலும் இதற்காக யாரும் முன்கூட்டி அனுமதி(Appointment) பெற வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். அதேபோல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க செல்லுகின்ற நபர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும் மற்றும் முன்னர் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து 6 மாதங்கள் கடந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும். இதற்காக மிஷிரிஃப் பகுதியிலுள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு செல்லாம்.
மேலும் கோவிட் நோய்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கவும், தனிநபர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்புக்காக நாட்டில் தேசிய தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என்றும் அவர் தெளிவு படுத்தினார். கோவிட் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மரபணு மாற்றம் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டதால் அதன் பாதிப்பை குறைக்க இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெரும் உதவியாக இருக்கும் என்றும் அல் சனத் தெளிவு படுத்தினார். புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.