குவைத்தில் வணிக விசிட் விசாக்கள் தொழில் விசாவாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
Image : செய்தி பதிவுக்கான மட்டமே
குவைத்தில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு வணிக விசிட் விசாக்கள் தொழில் விசாவாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
குவைத்தில் வணிக விசிட் விசாவில்(commercial visit visa) வருகின்ற நபர்கள் அதை தொழில் விசாக்களாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த புதிய முடிவு நடைமுறைக்கு வரும் என்று மனிதவள ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் கடந்த வாரம் கொரோனா அவசர கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சுமார் 21 மாத இடைவெளிக்குப் பிறகு குவைத்திற்கான அனைத்து வகையான விசாக்களையும் இந்த அக்டோபர் மாதம் மீண்டும் வழங்குவதை தொடங்க அமைச்சரவை முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது.
அதன் ஒரு பகுதியாக வணிக விசிட் விசாக்கள் பணி விசாக்களாக மாற்றப்பட்டு மனித வளத்திற்கான பொது ஆணைய குழுவால் அங்கீகாரமும் வழங்கப்பட்டது. மேலும் மனித வள மேன்பாட்டு துறையின் தானியங்கி வசதி மூலம் ஏற்கனவே பெறப்பட்ட விசா மாற்ற விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் எனவும்,ஆனால் இன்று முதல் தானியங்கி முறையில் விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.