குவைத்தில் 2,221 பேர் கைது செய்யப்பட்டு குறுகிய காலத்தில் நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன
Image : பரிசோதனை நேரத்தல் கைது செய்யப்பட்டவர்கள்
குவைத்தில் குறுகிய காலத்தில் 2000 ற்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்
குவைத் Residency Affairs Investigation Department வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி 01/10/21 முதல் 10/11/21 இடைப்பட்ட நாட்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் கைது செய்யப்பட்ட 2,221 பேர் நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டனர். இதில் 1088 பேர் வரையில் தங்கள் நாடுகளுக்கு நிரந்தரமாக நாடுகடத்தபட்டனர். அதேபோல் மீதியுள்ள நபர்களை நாடுகடத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே காலத்தில் 22 போலியான வீட்டு தொழிலாளர் அலுவலங்கள் கண்டறியப்பட்டு 106 பேரையும் குடியிருப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்தனர், இவர்களும் இந்த 2,221 பேரில் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்பான்சரின் கீழ் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள எந்தவொரு தொழிலாளர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்றும் 97288200 மற்றும் 97288211 என்ற Residency Affairs Investigation துறையின் தொலைபேசி எண்களில் அழைப்பதன் மூலம் இப்படிப்பட்ட தொழிலாளர்கள் குறித்து புகார் அளிக்கவும் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.