குவைத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்கும் பணிகள் துவங்கியது என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
குவைத் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய விசாக்களை வழங்கும் பணியை துவங்கியுள்ளது
குவைத்தில் நீண்ட இடைவேளிக்குப் பிறகு மீண்டும் குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்க துவங்கியுள்ளது என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முந்தைய நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தவிர புதிதாக நிபந்தனைகள் பின்வருமாறு:
- குடும்ப விசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பணி அனுமதிப்பத்திரத்தில் குறைந்தபட்சம் 500 தினார் சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.
- 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசா வழங்கப்படாது.
- 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும்.
- விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்,யார் யாருக்காக விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவரின் தடுப்பூசி சான்றிதழ்களையும் விண்ணப்பிக்கும் நேரத்தில் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் மற்றும் அதன் வழியாக சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் Scanning செய்யும் நேரத்தில் கிடைக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
- இதை தவிர கூடுதலாக 53 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வணிக விசிட் விசாக்கள் மற்றும் ஆன்-அரைவல் விசாக்களும் வழங்கப்படும்.இதற்கு ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிபந்தனைகளுடன் கூடுதலாக குவைத் ஒப்புதல் அளித்துள்ள இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும் எனவும் தினசரி நாளிதழ் இன்று(01/11/21) திங்கட்கிழமை சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.