குவைத் நாட்டிற்கு வெளியே தங்கியுள்ள நபர்கள் ஆன்லைன் வழியாக விசா புதுப்பிக்க முடியாது என்ற செய்தி வதந்தி ஆகும்
Image : விசா நகல்
குவைத்திற்கு வெளியே தங்கியுள்ள நபர்கள் ஆன்லைன் வழியாக விசா புதுப்பித்தல் செய்ய தற்போது வரையில் எந்த தடையும் விதிக்கவில்லை என்று குடியிருப்பு துறை விளக்கம்
குவைத்துக்கு வெளியே 6 மாதங்களுக்கும் மேலாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் குடியிருப்பு ஆவணத்தை(Work Permit) ரத்து செய்வது குறித்து தற்போதைய நிலையில் பரிசீலிக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த வகைக்கான குடியிருப்பு அனுமதிகளை ஆன்லைனில் புதுப்பித்தல் செய்வதை நிறுத்துவது தொடர்பாக புதிய உத்தரவுகள் எதுவும் இயற்றப்படவில்லை எனவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வெளியே தங்கியுள்ள நபர்களில் குறைந்தது ஒரு வருட செல்லுபடியாகும் விதத்தில் பாஸ்போர்ட் கைவசம் வைத்திருப்பவர்கள் குவைத்திற்கு வெளியே இருந்தபடி தங்களுடைய குடியிருப்பு அனுமதியை தொடர்ந்து புதுப்பிக்கலாம் எனவும், எந்தவொரு புதிய சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன் தேவையான கால அவகாசம் அனுமதிக்கப்படும் எனவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஆறு மாதங்களுக்கும் மேலாக குவைத்திற்கு வெளியே தங்கியுள்ள நபர்கள் தங்கள் குடியிருப்பு அனுமதியை புதுப்பிக்க சிறப்பு அனுமதி தேவை என்ற வதந்திகளுக்கு மத்தியில் அமைச்சகம் இதை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது வெளிநாட்டில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் குடும்ப விசாவில் உள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.