குவைத்தில் துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது
Image credit: Kurup Movie Official
குவைத்தில் துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படம் திரையிட தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது
பிரபலமான நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த குருப் திரைப்படம் கேரளாவில் 1984-யில் நடந்த ஒரு கொலை தொடர்பான Kerala State Police Department மற்றும் Interpol மூலம் தேடப்படும் ஒரு கொலை குற்றவாளியின் கதை ஆகும். இந்தியா அளவில் அந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட 5 மொழியில் இந்தியா,அமீரகம் உட்பட நேற்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் குவைத் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இந்த படத்தை குவைத்தில் திரையிட தடை விதித்துள்ளது எனவும் எனவே குவைத்தில் படம் திரையிடவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் குவைத்திலும் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. குவைத்தில் சினிஸ்கேப் மற்றும் ஓசோன் உள்ளிட்ட சினிமா விநியோக நிறுவனங்கள் வழியாக படம் திரையிட இருந்தது கடந்த நாள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து படத்தை திரையிட Kuwait Ministry of Information தடை விதிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் சம்பந்தப்பட்ட சினிமா திரையரங்குகள் தங்கள் அதிகாரப்பூர்வ Social Media தளங்கள் வழியாக பதில் அளித்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸில் உள்ள காட்சிகளில் குவைத் தொடர்பான சில காட்சிகளும், குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. இதனால்தான் குவைத்தில் படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
மேலும் குருப் என்ற இன்றுவரையில் தேடப்படும் அந்த குற்றவாளியான நபரின் மனைவி குவைத்திலுள்ள சுகாதாரதுறையில் செவிலியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனவும், இவருடைய இரண்டு மகன்களில் ஒருவருடன் குருப்பின் மனைவி குவைத்தில் வசித்து வருகின்றனர் என்ற தகவல்களும் கடந்த தினங்களில் வெளிவந்திருந்தது. இதற்கு முன்னரும் குவைத் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் குறிப்புகளும் இடம்பெற்ற Bell Bottom, Airlift உட்பட பல இந்திய திரைபடங்களுக்கு குவைத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.