குவைத் எர்வேஸ் ஒரே மாதத்தில் 50 லட்சம் தினார் லாபம் ஈட்டியுள்ளது என்று அதன் நிர்வாக பிரதிநிதிகள் அறிவிப்பு
Image : Kuwait Airways
கோவிட் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக ஒரே மாதத்தில் 50 லட்சம் தினார்கள் வரையில் லாபம் ஈட்டியதாக குவைத் எர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் 50 லட்சம் தினார் லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 2019 செப்டம்பரில் ஒரு கோடி தினார்கள் வரையில் நஷ்டத்தில் இருந்த நிறுவனத்தின் லாபம் ஒரே மாதத்தில் 50 லட்சம் தினார்களாக உயர்ந்துள்ளது. உலக முழுவதும் ஏற்பட்ட கோவிட் பரவலையடுத்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிறுவனம் கடந்த ஆண்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது.
இந்நிலையில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், இந்தியா, எகிப்து போன்ற உலகம் முழுவதிலும் இருந்து நிறுவனத்தின் விமான சேவைகள் செப்டம்பரில் மட்டுமே தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.