குவைத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத குடிமக்களை ஊழியர்களாக பணியமர்த்தத் தவறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்
Image : Kuwait Street
குவைத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் குடிமக்களின் எண்ணிக்கை குறைந்தால் கடும் அபராதம் விதிக்க திட்டம்
குவைத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத குடிமக்களை ஊழியர்களாக பணியமர்த்தத் தவறினால் கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மனிதவளத்திற்கான பொது ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய தொழிலாளர் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்க்கோள் காட்டி தினசரி நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.தனியார் நிறுவனங்களின் மீதான அபராத தொகையினை அதிகரித்து தொடர்பாக மனிதவளத்திற்கான பொது ஆணையம் சிவில் சர்வீஸ் கமிஷனிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களின் பரிந்துரைகளுக்காக சமர்பித்திருந்தது குறி்ப்பிடத்தக்கது. பின்னர் அந்த முடிவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டது. தனியார் துறையில் குடிமக்களை வேலைக்கு அமர்த்துவது கடுமையாக அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுகின்றன. இது தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆயிரக்கனக்கான குடிமக்களுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அரசாங்க வேலைகள் மீதான அழுத்தத்தையும் குறைக்கலாம். அரசு சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்கின்ற குடிமக்களின் எண்ணிக்கை சர்வதேச பொருளாதாரத் தரத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.