BREAKING NEWS
latest

Sunday, November 14, 2021

குவைத்தில் பயன்படுத்தப்படும் My Identity Application யில் மேலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சிவில் ஐடியில் மேலும் பல புதிய அம்சங்கள் இன்று முதல் சேர்க்கபட்டதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Image : தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

குவைத்தில் பயன்படுத்தப்படும் My Identity Application யில் மேலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் மக்கள் தங்களின் அடையாள அட்டையாக சிவில் ஐடிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தே. இந்நிலையில் கோவிட் பரவல் துவங்கியது முதல் பல்வேறுபட்ட பிரச்சனைக்கு தீர்வு என்ற அடிப்படையில் டிஜிட்டல் சிவில் ஐ.டி யாக பயன்படும் My Identity Application-ஐ லட்சக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து அதை அதிக அளவில் பயன்படுத்த துவங்கிய நிலையில் இந்த செயலி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதில் மேலும் பல மாற்றங்களை கொண்டுவர உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக My Identity Application-யில் தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான விபரங்களும் சேர்க்கப்பட்டு புதுப்பித்தல் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராணா-அல்-ஃபாரிஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்று(14/11/21) ஞாயற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இதன் முலம் குவைத்தில் ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள நபர்கள் அதற்கான விபரங்களையும் இனிமுதல் இதே செயலி வழியாக எளிதாக பெற முடியும்.

மேலும் அரசு சார்ந்த ஆவணங்களை மக்கள் எளிதாக கூடுதல் துறைகளுக்கும் பயன்படுத்தும் விதத்தில் டிஜிட்டல் மயமாக்குவதன் ஒரு பகுதியே இந்த மாற்றம் என்றும், சிவில் தகவல் ஆணையம், சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களுக்கு அது தொடர்பான விபரங்களும் My Identity Application-யில் சேர்க்கப்படும் என்றார். அதேபோல் மிக விரைவில் புதுப்பிக்கப்பட்ட இந்த செயலியில் வாகனங்களின் உரிமைகள் தொடர்பான ஆவணங்கள் உட்பட அரசு தொடர்பான பிற தனிப்பட்ட ஆவணங்களும் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Add your comments to குவைத்தில் பயன்படுத்தப்படும் My Identity Application யில் மேலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன

« PREV
NEXT »